Sunday, May 07, 2006

இந்தியக் கனவு 2020 - நமது சென்னை அணி புகைப்படங்கள்!!!

நமது சென்னை அணி தோழர்கள் சிலர் மற்றும் சிறார்கள், உங்கள் பார்வைக்காக!!!

Our Chennai Team - Pictures of a few volunteers and Kids!!!




























நன்றி!!!

Thanks!!!

12 comments:

Sivabalan said...

படங்கள் நன்றாக உள்ளது. சரியாக எங்கே எடுக்கப்பட்டது?
நல்ல பதிவு!

துளசி கோபால் said...

இந்தப் பிள்ளைகளாவது ஊழல் இல்லாத நாடாக இந்தியாவை ஆக்கட்டும்

வாழ்த்து(க்)கள்.

ஜெ. ராம்கி said...

Keept it up!

Anonymous said...

இலவச பாடப்புத்தக விநியோகமா?
குறிப்புகள் ஏதும் இல்லாததால் கேட்கிறேன். தவறாக எண்ண வேண்டாம்.

Anonymous said...

Hi
The snaps seemed to be interesting ....may i know the events which took place

குமரன் (Kumaran) said...

இந்தப் பதிவு நண்பர் நடராஜன் இட்டது. அவர் பதில் சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன். அவர் சொல்லாவிட்டால் பின்னர் நான் சொல்கிறேன்.

குமரன் (Kumaran) said...

நடராஜன் கேட்டுக் கொண்டதற்கிணங்க பின்னூட்டங்களுக்கு பதில் சொல்கிறேன். சென்னையில் உள்ள இந்தியக் கனவு 2020 அணியினர் சென்னை அண்ணா நகரில் உள்ள இந்த ஏழைக் குழந்தைகளுக்கு ஆங்கிலம், கணினி போன்றவற்றைச் சொல்லிக் கொடுக்கின்றனர். தொடக்கத்தில் ஒரு ஆலயத்தில் ஒவ்வொரு வார இறுதியிலும் இது நடந்தது. அந்தக் கோயில் தான் இந்தப் புகைப்படங்களில் இருக்கிறது. அண்மையில் ஒரு அன்பர் தன் வீட்டு மொட்டை மாடியை இதற்காகத் தந்திருக்கிறார். அங்கு வார இறுதி வகுப்புகள் நடைபெறுகின்றன.

இந்தப் புகைப்படங்கள் தீபாவளியின் போது எடுக்கப்பட்டவை. அப்போதிலிருந்து இவற்றை இந்த வலைப்பூவில் இடும்படி நடராஜன் சொல்லிக் கொண்டிருந்தார். கடைசியில் பொறுமையிழந்து அவரே புகைப்படங்களை வலையேற்றிவிட்டார். :-)

சென்னை அணியினர் தரும் செய்திகள் மற்றும் அவர்களின் செயல்பாடுகளைப் பற்றி நடராஜன் இந்த வலைப்பூவில் அவ்வப்போது தொடர்ந்து இட்டுவருவார். இந்தப்படங்களைப் பார்த்து பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.

குமரன் (Kumaran) said...

நன்றி சிவபாலன். உங்கள் கேள்விக்கு விடை முந்தையப் பின்னூட்டத்தில் உள்ளது.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துக்களுக்கு நன்றி துளசி அக்கா. ஆமாம். நீங்கள் சொல்வது சரி.

ஒரே ஒரு சந்தேகம். நீங்கள் 'பிள்ளைகள்' என்று சொன்னது இந்தப் பணி செய்துவரும் இளைஞர்களையா இல்லை பாடம் படிக்கும் பிள்ளைகளையா? இருவராலும் ஊழல் இல்லாத நாடாக நம் நாட்டை மாற்ற முடியும். இல்லையா? :-)

குமரன் (Kumaran) said...

நன்றி 'ரஜினி' ராம்கி.

குமரன் (Kumaran) said...

தவறாக நினைப்பதற்கு என்ன இருக்கிறது பெயர் சொல்லாத நண்பரே. இலவசப் பாடபுத்தகம் தருவதில் தான் நம் மக்களின் உதவும் குணம் வெளிப்படத் தொடங்குகிறது. அதனை அங்கேயே நிறுத்திவிடாமல் மேன்மேலும் பெருக்கத் தான் இந்த இயக்கம்.

குமரன் (Kumaran) said...

நன்றி அபர்ணா. உங்கள் கேள்விக்கு விடை மேலே இருக்கிறது.