கனவுகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். சிலருக்கு பெரும்புகழ் பெற வேண்டும் என்று கனவு. பலருக்கு நிறைய செல்வம் சேர்த்து வளமான வாழ்வு வாழவேண்டும் என்று கனவு. சிலருக்கு தன் குடும்பம் எந்தக் குறையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்று கனவு. இப்படிப் பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். ஆனால் எல்லாக் கனவுகளும் நனவாக வேண்டும் எனில் முயற்சி வேண்டும். செயல்பட வேண்டும். ஒரு தொலைநோக்குடன் செயல்பட வேண்டும். இல்லையேல் அந்தக் கனவுகள் வெறும் கனவுகளாகவே நின்றுவிடும்.
இந்தப் வலைப்பூவில் அப்படி ஒரு கனவினைக் கண்டு அந்தக் கனவினை நனவாக்க தம்மால் தங்களுக்குத் தெரிந்த வகையில் முயற்சி செய்யும் ஒரு சிறு இளைஞர் கூட்டத்தைப் பற்றி எழுதப் போகிறேன். அவர்களின் கனவு என்ன? எந்த நோக்கத்துடன் இந்த இயக்கம் ஆரம்பிக்கப் பெற்றது? எந்த நோக்கத்துடன் இந்த வலைப்பூ ஆரம்பிக்கப் பெற்றது? இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் என்ன என்ன? என்பதையெல்லாம் இந்த வலைப்பூவில் பார்க்கலாம்.
இந்த இயக்கத்தில் என்னுடன் பங்குகொள்ளும் மற்ற வலைப் பதிவாளர்கள் நடராஜனும் சிவாவும் இந்த வலைப்பூவிலும் என்னுடன் பங்கு கொண்டுப் பதிவுகள் இடுவார்கள்.
நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்
இமைப் பொழுதும் சோராதிருத்தல் - உமைக்கினிய மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்
சிந்தையே! இம்மூன்றும் செய்.
- மகாகவி பாரதியார்.
Sunday, January 08, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
குமரன்,
கடவுளின் அருளால், நம் போன்றோர் அனைவரின் கனவும் நனவாக பிராத்திப்போம்!!!
அன்புடன்,
நடராஜன்.
குமரன், நீங்கள் எந்தக் கூட்டத்தைப் பற்றிச் சொல்லப் புகுகின்றீர்கள் என்று தெரிகின்றது. ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஆமாம் இராகவன். உங்களிடம் இந்த இளைஞர் கூட்டத்தைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அவர்களைப் பற்றித் தான் எழுதப் போகிறேன்(றோம்).
Post a Comment