Friday, October 20, 2006

சென்னை பெருங்குடியில் தீபாவளி






சென்னை இந்தியக் கனவு இயக்கத்தினர் பெருங்குடி சிறுவர் சிறுமியர்களுடனும் அன்னை இல்லம் சிறுமியர்களுடனும் கொண்டாடிய தீபாவளிக் கொண்டாட்டங்களின் காட்சிகள் இங்கே.

Sunday, October 15, 2006

இந்தியத் தொலைகாட்சிகளில் இந்தியக்கனவு 2020

இந்தியக்கனவு 2020 குழுவினரைப் பற்றிய செய்தியினை இளைய தலைமுறையினருக்கும் மற்றவருக்கும் எடுத்துச் செல்லும் முகமாக இந்தியத் தொலைக்காட்சிகளில் அவர்களைப் பற்றி செய்திகளில் சொல்லப்பட்டது. அவற்றின் ஒளி-ஒலி வடிவங்கள் இங்கே.

h



இந்த இந்தியக்கனவு இயக்கத்திற்கு உந்துதலாக இருந்த ஐயா மேதகு அப்துல் கலாம் அவர்களுக்கு இந்த இயக்கத்தின் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sunday, June 18, 2006

இந்தியக் கனவு 2020 - (18/06/2006 )இந்த வார இதழ்!!!

அன்பர்களே!

இந்தியக் கனவு 2020, (18/06/2006) இந்த வார இதழை படிக்க இங்கே சொடுக்கவும் http://www.geocities.com/dream_india_2020/

நன்றி!

இந்தியக் கனவு 2020 - எப்படித் தோன்றியது?

வெகு நாளாக இந்தத் தலைப்பில் எழுத வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆனால் எப்படித் தொடங்குவது என்று தான் தெரியவில்லை. அண்மையில் 'மிட் டே (Mid Day)' என்னும் மும்பை தினசரி ஒன்று இந்த இயக்கம் தோன்றியதைப் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் அதனையே மொழிபெயர்த்து எழுதிவிடலாம் என்று தோன்றியது.

இந்த இயக்கத்தின் தலைப்பினை ஏற்கனவே பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். நம் இந்தியத் திருநாட்டின் ஈடு இணையற்றத் தவப்புதல்வன், வாராது வந்த மாமணி, நம் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்கள் இந்தச் செயல்திட்டத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருக்கிறார். அவரால் தூண்டப்பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களில் சிலரே இந்த இயக்கத்தினைத் தோற்றுவித்தனர். தற்போது இது நம் நாட்டின் பல நகரங்களிலும் பற்பல தன்னார்வலர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டு மிக வேகமாகப் பரவி வருகிறது. இனி ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.

***

மும்பையின் கோர்கோவனின் ஆரே மில்க் காலனியின் சேரிப்பகுதிகளில் வசிக்கும் சிறுவர்களுக்குக் கல்வியைக் கொடுப்பதன் மூலம் மூன்று கணினி மென்பொருளாளர்கள் - வருண் ரங்கராஜன், நடராஜன் ராமன், ஈஸ்வரமூர்த்தி - நம் குடியரசுத் தலைவரின் 'தொலைநோக்கம் 2020'க்கு தங்களின் பங்கினை ஆற்றிக் கொண்டிருக்கின்றனர். மூவரும் தற்போது டாடா கன்சல்டன்சி சர்வீஸஸில் (TCS) பணிபுரிகின்றனர்.

அவர்களின் முயற்சியான இந்தியக் கனவு இயக்கத்தின் நோக்கம் இந்தச் சிறுவர்கள் கல்வியறிவில் தன்னிறைவு பெறச் செய்வதே.

இந்த மூவரும் சந்தித்துக் கொண்டது திருவனந்தபுரத்தில் டி.சி.எஸ். நிறுவனத்தின் செயற்பயிற்சி நிலையத்தில். அந்த நேரத்தில் தான் தங்கள் மூவருக்கும் நடுவே பொதுவான ஆசையாக இருப்பது அடிமட்ட நிலையிலிருந்து மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதே என்று மூவரும் உணர்ந்தனர். தற்செயலாக பணிக்காக மூவரும் டி.சி.எஸ்ஸின் அந்தேரிக் கிளைக்கே அனுப்பப்பட்ட போது தங்களின் ஆசைக்கு ஒரு வலுவான அடித்தளம் அமைக்கவிரும்பினர்; இந்தியக் கனவு 2020 இயக்கம் தோன்றியது.

'இந்தக் குழந்தைகளுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்றோ இல்லை எழுத்தறியாமையை நீக்குவதற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்றோ எங்களுக்கு திடீரென்று ஞானோதயம் வந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் நடராஜனையும் ஈஸ்வரையும் சந்தித்தப் பின் இந்த பிரச்சனையைத் தீர்க்க நாமும் ஏதாவது செய்ய முடியும் என்பதனை நான் உணர்ந்தேன்' என்கிறார் தற்போது கோர்கோவனில் தங்கியிருக்கும் வருண் ரங்கராஜன்.அவர்களால் முடிந்த அளவு என்று நினைத்துத் தொடங்கியதே அந்தேரி கிழக்கில் இருக்கும் விஜய்நகரில் வாழும் ஏழைச் சிறுவர்களுக்கு ஜனவரி 2005ல் சொல்லிக் கொடுக்கத் தொடங்கியது.

போன வருடம் ஜீன் மாதத்தில் இருந்து வருணும் ஈஸ்வரமூர்த்தியும் ஆரே மில்க் காலனியில் இருக்கும் ஒரு சிறு வாடகை அறையில் சிறுவர் சிறுமியர்களுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளின் அறிவுப் பரப்பைக் கூட்டும் முயற்சியாக இந்த இருவரும் ஆங்கிலம், கணிதம், அடிப்படைப் புவியியல், கைத்தொழில்/கலைகள், அடிப்படை அறிவியல் போன்றவற்றைச் சொல்லித் தருகிறார்கள்.

பாடப்புத்தகங்கள், மற்ற கல்விக்குத் தேவையான உபகரணங்கள், படிப்பவர்களுக்குத் தேவையானவைகள் போன்ற செலவினங்களுக்கான நிதி இந்த இளைஞர்களின் சொந்தப் பணமே. இவர்கள் இருவரின் நண்பர் நடராஜன் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அவரும் குறிப்பிட்ட அளவு நிதியினை இந்த இயக்கத்திற்காக அனுப்புகிறார்.

***

மேற்கொண்டு அந்தக் கட்டுரையில் உள்ளதைப் படித்துப் பாருங்கள்.

இந்தக் கட்டுரையில் இந்த மூன்று இளைஞர்களை மட்டுமே கூறியிருந்தாலும் நான் ஏற்கனவே சொன்ன மாதிரி எண்ணற்ற இளைஞர்கள் இந்த இயக்கத்தில் தற்போது ஈடுபட்டுவருகிறார்கள். அவர்கள் டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, ஐ.பி.எம்., டார்கெட் போன்ற பல நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் இளைஞர்கள். மென்பொருளாளர்கள் மட்டும் இல்லாமல் வேறு இளைஞர்களும் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் பொறியியற் கல்லூரி மாணவர்களும் மற்றக் கல்லூரி மாணவர்களும் இதில் ஈடுபட்டுத் தங்களின் பங்கினை ஆற்றிவருகிறார்கள்.

நடராஜனைப் போல் இந்தியாவில் இருந்து தங்களின் பங்கினை ஆற்றவேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் பணியின் பொருட்டு வேறு நாடுகளில் (குறிப்பாக அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில்) வசிக்கும் இந்திய இளைஞர்கள் தாங்கள் வெளிநாடுகளில் இருக்கும் வரை தங்களால் முடிந்த பங்கான நிதியுதவியையும் இந்தக் கனவினை மற்ற இளைஞர்களிடம் எடுத்துச் செல்லும் வேலையையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த இயக்கத்தினைப் பற்றி மேலும் அறிய இந்த வலைப்பக்கத்திற்குச் செல்லுங்கள். எம் கடன் பணி செய்து கிடப்பதே என்ற எண்ணம் கொண்ட யாவரும் வாருங்கள். நேரடியாக களத்தில் இறங்கி பணி புரியும் தன்னார்வலர்களே இன்றைய முக்கியத் தேவை.

***

இந்தப் பதிவில் வரும் ஆண்பாலரைக் குறிக்கும் சிறுவர், இளைஞர்கள் போன்ற சொற்கள் இருபாலரையும் குறிப்பதாக எடுத்துக் கொள்ளுங்கள்.

Saturday, June 17, 2006

Hyderabad Medical camp!

Couple of our team members volunteered for this camp. This camp WAS NOT conducted by DreamIndia2020 team.





Sunday, June 11, 2006

இந்தியக் கனவு 2020 - (11/06/2006 )இந்த வார இதழ்!!!

அன்பர்களே!

இந்தியக் கனவு 2020, (11/06/2006) இந்த வார இதழை படிக்க இங்கே சொடுக்கவும் http://www.geocities.com/dream_india_2020/

நன்றி!

Sunday, June 04, 2006

இந்தியக் கனவு 2020 - (04/06/2006 )இந்த வார இதழ்!!!

அன்பர்களே!

இந்தியக் கனவு 2020, (04/06/2006) இந்த வார இதழை படிக்க இங்கே சொடுக்கவும் http://www.geocities.com/dream_india_2020/

நன்றி!

Sunday, May 28, 2006

இந்தியக் கனவு 2020 - (28/05/2006 )இந்த வார இதழ்!!!

அன்பர்களே!

இந்தியக் கனவு 2020, (28/05/2006) இந்த வார இதழை படிக்க இங்கே சொடுக்கவும் http://www.geocities.com/dream_india_2020/

நன்றி!

Sunday, May 21, 2006

இந்தியக் கனவு 2020 - (21/05/2006 )இந்த வார இதழ்!!!

அன்பர்களே!

இந்தியக் கனவு 2020, (21/05/2006) இந்த வார இதழை படிக்க இங்கே சொடுக்கவும் http://www.geocities.com/dream_india_2020/

நன்றி!

Wednesday, May 17, 2006

இந்தியக் கனவு 2020 - தாரா பாய்!

அன்பர்களே!

வயதான காலத்திலும், சொந்த பந்தம் இல்லாவிடினும், நானே உழைத்து அதில் கிடைப்பதை வைத்துதான் வாழ்வேன் என்று வாழ்பவர். அவரை பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்கவும்... http://www.geocities.com/dream_india_2020/PAU_Tarabai.html

நன்றி!



Sunday, May 14, 2006

இந்தியக் கனவு 2020 - (14/05/2006 )இந்த வார இதழ்!!!

அன்பர்களே!

இந்தியக் கனவு 2020, (14/05/2006) இந்த வார இதழை படிக்க இங்கே சொடுக்கவும் http://www.geocities.com/dream_india_2020/

நன்றி!

Monday, May 08, 2006

இந்தியக் கனவு 2020 - நமது புனே அணி புகைப்படங்கள்!!!

"அப்லே கர்" இது புனேவில் உள்ள ஒரு தாய், தந்தையர் மற்றும் குடும்பத்தினர் அற்ற குழந்தைகள் வாழும் இல்லம்.கடந்த ஒரு வருடமாக நமது அணியினர் இங்கு தொடர்ந்து சென்று, இன்று அந்த பிஞ்சுகளின் வாழ்க்கையில் ஒரு பகுதி ஆகிவிட்டனர் என்றால் அது மிகையாகாது!!! உங்கள் அன்புப் பார்வைக்காக சில புகைப்படங்கள்.....

"Aphale Ghar" - Is a home for the God blessed kids in Pune. Our team members have been visiting this place for almost a year now and today they have become an integral part of the kids life. We are happy to share a few of the snaps with you all...








அன்பர்களே, அந்த சிறார்களின் கண்களில் தெரியும் ஒளியினை சற்று கூர்ந்து பாருங்கள்........ அட...உங்கள் கண்களில் வரும் ஆனந்த கண்ணீரை நான் பார்க்கிறேன்....

நன்றி!!!

Thanks!!!

Sunday, May 07, 2006

இந்தியக் கனவு 2020 - நமது சென்னை அணி புகைப்படங்கள்!!!

நமது சென்னை அணி தோழர்கள் சிலர் மற்றும் சிறார்கள், உங்கள் பார்வைக்காக!!!

Our Chennai Team - Pictures of a few volunteers and Kids!!!




























நன்றி!!!

Thanks!!!

இந்தியக் கனவு 2020 - இந்த வார இதழ்!!!

அன்பர்களே!

இந்தியக் கனவு 2020, இந்த வார இதழை படிக்க இங்கே சொடுக்கவும் http://www.geocities.com/dream_india_2020/

நன்றி!

Sunday, April 23, 2006

At 106, she still cares about India!!!

Dear All,

This is a must read even if you are busy...

http://in.rediff.com/news/2006/apr/05spec.htm

Thanks,
Natarajan.

Saturday, April 08, 2006

Paada Painting Competition Snaps!!!!






Tuesday, February 07, 2006

142: இளமையில் கல் - திசைகள் மின்னிதழில் என் கட்டுரை

திசைகள் மின்னிதழின் பிப்ரவரி இதழில் என்னுடைய கட்டுரை வெளியிடப் பட்டிருக்கிறது. கட்டுரையை அங்கே படித்து கருத்துக்களை இங்கே பின்னூட்டமாக இடுங்கள்.

கட்டுரை எழுதிக் கொடுக்கச் சொல்லி பின்னர் அதனை திசைகளில் வெளியிட்ட அருணா அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி.

Friday, January 13, 2006

112: நதிமூலம்

இந்த உலகத்தில் எத்தனையோ நதிகள் இருக்கின்றன. சில நதிகள் நீண்ட நெடுந்தூரத்திற்கு ஓடி அங்குள்ள நிலங்களையெல்லாம் வளம் செய்து பெரும்பெயர் பெற்று மக்கள் மனதில் நீங்காத இடம் கொண்டு அவர்கள் வாழ்வில் கலந்து நிற்கின்றன. அந்த நதிகளின் தோற்றுவாய்க்குச் சென்றுப் பார்த்தால் இவ்வளவு பெரிய நதியா, இவ்வளவு பெருமை பெற்ற நதியா இந்த சிறிய இடத்தில் இருந்து தோன்றியது என்று தோன்றும். அதனால் தான் நம் முன்னோர் நதிமூலம் பார்க்கக்கூடாது என்றனர். ஏனெனில் பெரும்பாலான நதிகள் தோன்றும் போது மிக எளிமையாகத் தான் தோன்றுகின்றன.

இந்த 'இந்தியக்கனவு 2020' என்ற இயக்கமும் அப்படி எளிமையான சூழலில் தோன்றியது தான். மும்பையில் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் மூன்று பேர் நம் நாட்டிற்கு ஏதாவது செய்யவேண்டும், நம் குடியரசுத் தலைவரின் தொலைநோக்குத் திட்டம் செயல்பெற நம்மால் இயன்றதைச் செய்யவேண்டும், எத்தனையோ விதமாய் நமக்கு உதவிய நம் தாய்த்திருநாட்டிற்கு நாம் என்ன செய்தோம் என்று நம்மை நாமே கேட்டு நல்லது செய்யவேண்டும், என்ற வேகத்தில் தொடங்கியது தான் 'இந்தியக் கனவு 2020'.

இந்த மூவரும் அமர், அக்பர், அந்தோணி என்று தங்களை அழைத்துக் கொண்டு ஜனவரி 2005ல் ஆரம்பித்தார்கள் தங்கள் எளிமையான சோதனையை. தம்மைப் போன்ற சிந்தனை உடையவர்கள் நிறைய பேர் இருப்பார்கள்; அவர்களை எல்லாம் ஒன்று சேர்க்கவேண்டும் என்னும் எண்ணத்துடன் தங்கள் சிந்தனைகளை எல்லாம் ஒரு கையெழுத்து இதழில் பதித்து மற்றவர்களுக்குக் கொடுக்க ஆரம்பித்தார்கள். அதே நேரத்தில் சிறு சிறு உதவிகளை இல்லாதாருக்குச் செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் செய்த, செய்யும் செயல்களைப் பற்றியும் எண்ணங்களைப் பற்றியும் இந்த வலைப்பூவில் எழுதப் போகிறோம்.

வலைப்பூவின் நோக்கங்கள்:

1. இந்தியக் கனவு 2020 என்னும் இந்த இயக்கத்தைப் பற்றிச் சொல்லுதல்
2. இந்த இயக்கத்தின் முந்தைய செயல்பாடுகள், தற்போதைய செயல்பாடுகள் ஆகியவற்றைப் பதித்தல்
3. ஒத்த சிந்தனைகள் உடையவரை ஒன்று சேர்த்தல்
4. இங்கு சொல்லப்பட்ட செயல்பாடுகளைப் படிப்பவர்கள் இந்த இயக்கத்தில் கலந்து கொள்ளாமலேயே தங்கள் அளவில் அவற்றை செயல்படுத்தத் தூண்டுதல்
5. செயல்பாடுகளுக்கு மேலதிக ஆலோசனையை வாசகர்களிடம் இருந்து பெறுதல்

இந்த இயக்கத்தைப் பற்றி அதிக விவரங்கள் அறிய இங்கே செல்லவும்.

Monday, January 09, 2006

107: வாராது வந்த மாமணி

உலகத்தில் எந்த நாடாயிருந்தாலும் சரி, பகுதியாய் இருந்தாலும் சரி, இனமாய் இருந்தாலும் சரி, குழுவாய் இருந்தாலும் சரி, தனி மனிதனாய் இருந்தாலும் சரி, ஒரு விஷயத்தைக் கண்கூடாகக் காணலாம். வாழ்வதும் தாழ்வதும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கும். ஒரு நாடோ பிரதேசமோ இனமோ குழுவோ தாழ்வுக்குச் சென்று அவதிப் படும் போது யாரோ ஒருவர் வந்து அதனை மேல் நிலைக்குக் கொண்டு செல்வார். சரித்திரக் காலத்திற்கு முன் இப்படி தாழ்விலிருந்து வாழ்விற்கு அழைத்துச் சென்றவர்கள் நம்மிடையே இப்போது தெய்வமாகப் போற்றப் பட்டுக் கொண்டிருக்கலாம் - ஐயன் வள்ளுவன் சொன்னபடி.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்

அண்மையில் நம் பாரத நாடு அப்படிப் பல பேரைக் கண்டிருக்கிறது. பட்டியல் இட்டால் சிலரை அறியாமல் விட்டுவிட வாய்ப்பிருப்பதால் பட்டியல் இடவில்லை.

அப்படி வாராது வந்த மாமணிகளில் ஒருவர் தற்போது நம் குடியரசுத் தலைவராக இருக்கும் மாண்புமிகு அப்துல் கலாம் அவர்கள்.

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது விஞ்ஞானி அப்துல் கலாமைத் தான் தெரியும். அவர் அளவற்ற சாதனைகள் செய்துள்ளார் என்று தெரியுமே ஒழிய மேல் விவரங்கள் தெரியாது. அவரை நம் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்ற போது மகிழ்ச்சி அடைந்தாலும் அந்தப் பதவியில் அவரால் என்ன சாதிக்க முடிந்துவிடும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.

ஒன்றரை வருடங்களுக்கு முன் நண்பர் நடராஜன் அறிமுகமானார். அவருடன் மின்னஞ்சல் மூலமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது தான் அவர் தன் மனத்தில் இருக்கும் ஒன்றைப் பற்றிக் கூறினார். தன் எண்ணங்களைப் பதிந்து வைத்திருக்கும் வலைப்பக்கத்தையும் காண்பித்தார். அந்த வலைப் பக்கத்தில் தன்னையும் தன் குடும்பத்தாரையும் அறிமுகப்படுத்திய பின் தான் எப்படி அப்துல் கலாம் அவர்களின் எண்ணங்களால் தூண்டப் பெற்று பாரத நாட்டிற்காக ஒரு கனவு கண்டு கொண்டிருக்கிறேன் என்பதையும் விளக்கியிருந்தார். நான் அதைப் படித்தப் போது தான் இந்தக் கால இளைஞர்கள் நம் குடியரசுத் தலைவரால் எப்படி எல்லாம் உந்தப் படுகிறார்கள் என்பது புரிந்தது.

அந்தப் புரிதல் மேலும் வலுப்பட்டது, ஆன்மிகப் புத்தகங்களையே விரும்பிப் படிக்கும் என் தம்பி 'அக்கினிச் சிறகுகள்' படிப்பதைப் பார்த்த போது தான். எத்தனை இளைஞர்களை நல்ல வழியில் செல்லத் தூண்டுகிறார் இவர் என்று தெரிந்தது. எத்தனை இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுகிறார் இவர் என்று தெரிந்தது. அப்படி ஒரு உந்துதல் சக்தியாக இருக்கும் அப்துல் கலாம் நம் பாரத அன்னை பெற்ற, வாராது வந்த மாமணிகளில் ஒருவர் என்பதில் என்ன சந்தேகம்?

அப்துல் கலாம் அவர்களின் 'இந்தியத் தொலைநோக்கு 2020' என்னும் செயல்திட்டத்தினால் தூண்டப்பட்டதே இந்த 'இந்தியக் கனவு 2020' என்னும் இயக்கம்.

Sunday, January 08, 2006

105: கனவு மெய்ப்பட வேண்டும்

கனவுகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். சிலருக்கு பெரும்புகழ் பெற வேண்டும் என்று கனவு. பலருக்கு நிறைய செல்வம் சேர்த்து வளமான வாழ்வு வாழவேண்டும் என்று கனவு. சிலருக்கு தன் குடும்பம் எந்தக் குறையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்று கனவு. இப்படிப் பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். ஆனால் எல்லாக் கனவுகளும் நனவாக வேண்டும் எனில் முயற்சி வேண்டும். செயல்பட வேண்டும். ஒரு தொலைநோக்குடன் செயல்பட வேண்டும். இல்லையேல் அந்தக் கனவுகள் வெறும் கனவுகளாகவே நின்றுவிடும்.

இந்தப் வலைப்பூவில் அப்படி ஒரு கனவினைக் கண்டு அந்தக் கனவினை நனவாக்க தம்மால் தங்களுக்குத் தெரிந்த வகையில் முயற்சி செய்யும் ஒரு சிறு இளைஞர் கூட்டத்தைப் பற்றி எழுதப் போகிறேன். அவர்களின் கனவு என்ன? எந்த நோக்கத்துடன் இந்த இயக்கம் ஆரம்பிக்கப் பெற்றது? எந்த நோக்கத்துடன் இந்த வலைப்பூ ஆரம்பிக்கப் பெற்றது? இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் என்ன என்ன? என்பதையெல்லாம் இந்த வலைப்பூவில் பார்க்கலாம்.

இந்த இயக்கத்தில் என்னுடன் பங்குகொள்ளும் மற்ற வலைப் பதிவாளர்கள் நடராஜனும் சிவாவும் இந்த வலைப்பூவிலும் என்னுடன் பங்கு கொண்டுப் பதிவுகள் இடுவார்கள்.

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்
இமைப் பொழுதும் சோராதிருத்தல் - உமைக்கினிய மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்
சிந்தையே! இம்மூன்றும் செய்.

- மகாகவி பாரதியார்.